மீனவர்கள் வலையில் அதிகளவில் சிக்கிய மீன்கள் : புயலுக்கு பின் கடலுக்கு சென்ற மீனவர்கள் மகிழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டத்தில், புயலுக்கு பின் ஆழ்கடலில் சகஜநிலை திரும்பி உள்ள நிலையில், மீனவர்களின் வலையில் அதிகளவில் மீன்கள் சிக்கி உள்ளது.
மீனவர்கள் வலையில் அதிகளவில் சிக்கிய மீன்கள் : புயலுக்கு பின் கடலுக்கு சென்ற மீனவர்கள் மகிழ்ச்சி
x
கன்னியாகுமரி மாவட்டத்தில், புயலுக்கு பின் ஆழ்கடலில் சகஜநிலை திரும்பி உள்ள நிலையில், மீனவர்களின் வலையில் அதிகளவில் மீன்கள் சிக்கி உள்ளது. கியார் மற்றும் மகா புயல் காரணமாக, கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பத்து நாட்களுக்கு மேல் இடைவெளி ஏற்பட்டு, அதன் பின் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு தங்கியிருந்து மீன்பிடித்து கரை திரும்பி வந்த வண்ணம் உள்ளனர். ஆழ்கடலில் தற்போது சகஜமான காலநிலை காணப்படுவதாகவும் மீன்கள் அதிகளவில் கிடைத்து வருவதாகவும் மகிழ்ச்சியோடு தெரிவித்தனர். தற்போது குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இங்கிருந்து தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்