உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனு - அதிமுக அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர், வரும் 15 மற்றும் 16-ம் தேதிகளில் விண்ணப்ப படிவங்களை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனு - அதிமுக அறிவிப்பு
x
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர், வரும் 15 மற்றும் 16-ம் தேதிகளில் விண்ணப்ப படிவங்களை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மாவட்டந்தோறும் விண்ணப்ப படிவங்களை பெற கட்சியின் முக்கிய நிர்வாகிகள்  பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடுவோருக்கு விண்ணப்ப கட்டணம் 25 ஆயிரம் ரூபாய், மாநகராட்சி வார்டு உறுப்பினருக்கு போட்டியிட 5 ஆயிரம், நகர மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட 10 ஆயிரம் ரூபாய் என கட்டணம்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 
இதேபோல் நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட 2 ஆயிரத்து 500, பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட 5 ஆயிரம், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட ஆயிரத்து 500 ரூபாய் மற்றும் மாவட்ட ஊராட்சி மன்ற குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட 5 ஆயிரம், ஊராட்சி ஒன்றிய குழு வார்டு உறுப்பினருக்கு  3 ஆயிரம் ரூபாய் என விண்ணப்ப கட்டணமாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்