பயணிகள் கூட்டத்திற்குள் புகுந்த போலீஸ் வாகனம் : பெண் உயிரிழப்பு, 4 பேர் படுகாயம்

நெல்லை மாவட்டத்தில், பேருந்திற்காக காத்திருந்த பயணிகள் மீது, போலீஸ் வாகனம் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
பயணிகள் கூட்டத்திற்குள் புகுந்த போலீஸ் வாகனம் : பெண் உயிரிழப்பு, 4 பேர் படுகாயம்
x
நெல்லை மாவட்டத்தில், பேருந்திற்காக காத்திருந்த பயணிகள் மீது, போலீஸ் வாகனம் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். ராஜபாளையம் பட்டாலியனைச் சேர்ந்த காவலர்கள், கடையநல்லூரில் இருந்து பேருந்து மூலம் ராஜபாளையம் திரும்பிக் கொண்டிருந்தனர்.  திரிகூடபுரம் அருகே சென்றபோது பேருந்தின் முன்பக்க டயர்கள் வெடித்ததால், அங்கு பேருந்திற்காக காத்திருந்த பயணிகள் கூட்டத்தில் புகுந்தது. இதில்,  ஆயிஷா பீவி என்பவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த 4 பேரை அப்பகுதி மக்கள் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்தை கண்டித்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்ட நிலையில், போலீசாரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, கலைந்து சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்