"பப்ஜி விளையாட்டை தடை செய்ய வேண்டும்" - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

கல்வியை சீரழித்து, வன்முறையை வளர்க்கும் 'பப்ஜி' என்ற இணையதள விளையாட்டை தடை செய்ய வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பப்ஜி விளையாட்டை தடை செய்ய வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
கல்வியை சீரழித்து, வன்முறையை வளர்க்கும் 'பப்ஜி' என்ற இணையதள விளையாட்டை தடை செய்ய வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரையும் அடிமையாக்கி, அவர்களின் எதிர்காலத்தை இந்த விளையாட்டு கேள்விக்குறியாக்குகிறது என  தெரிவித்துள்ளார். சீனா, நேபாளம், ஜோர்டான், ஈராக்  உள்ளிட்ட நாடுகள், 'பப்ஜி' விளையாட்டை தடை செய்துள்ள நிலையில், இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய - மாநில அரசுகள் அதனை தடை செய்ய வேண்டும் எனவும் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்