கனமழை : நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது

சேலத்தில் நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழையால் அங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை : நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது
x
சேலத்தில் நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழையால் அங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அம்மாபேட்டை, கிச்சிப்பாளையம், பிள்ளையார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் மிதக்கும் நிலையில் செய்வதறியாது தவிப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். சேலம் நகரின் முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் விரைந்து செயல்பட்டு தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்