30 ஆண்டுகளுக்கு பிறகு ஆய்வில் தெரிய வந்த வரலாறு- தென் கொங்கு அதிஇராசராசன் கால நடுக்கல் கண்டெடுப்பு

தென் கொங்கு நாட்டை ஆண்ட அதிஇராசராசன் கால, 'நடுகல்' கோவை அரசு அருங்காட்சியகத்தில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அலசுகிறது, இந்த சிறப்பு செய்தித்தொகுப்பு
30 ஆண்டுகளுக்கு பிறகு ஆய்வில் தெரிய வந்த வரலாறு- தென் கொங்கு அதிஇராசராசன் கால நடுக்கல் கண்டெடுப்பு
x
தமிழர்களின் பெருமையை தாங்கி நிற்கும் வரலாற்றுக்குச் சான்றுகளாக இருப்பது கல்வெட்டுகள் தான். தமிழின் பெருமையை பேசும் கல்வெட்டு ஒன்று கோவை திருப்பூர் எல்லையில் உள்ள செலக்கரச்சல் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன் கண்டெடுக்கப்பட்டு கோவை அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் வரலாறு தெரியாமல் ஆவணப்படுத்த முடியாமல் இருந்த நிலையில் சமீபத்தில் இதனை பற்றி தெரியவந்துள்ளது. தென் கொங்கு நாட்டை ஆண்ட வீரகேரள வம்சத்தை சேர்ந்த அதிஇராசராசன் காலத்தில் வைக்கப்பட்ட நடுகல் இது என்பது தெளிவாகி உள்ளது. அதிஇராசராசன் தன் ஆட்சிக் காலத்தில் வீரர் ஒருவருக்கு தானம் வழங்கிய கல்வெட்டு இது என்பதை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். போரில் உயிரிழந்த வீரனின் தியாகத்தை அரசனே போற்றும் வகையிலான கல்வெட்டு இது என்றும் கூறப்படுகிறது. கோவை அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த கல்வெட்டை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். Next Story

மேலும் செய்திகள்