12 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது பவானிசாகர் அணை - முழு கொள்ளளவை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 12 ஆண்டுகளுக்கு பிறகு, முழு கொள்ளளவான 105 அடியை எட்டியுள்ளது.
12 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது பவானிசாகர் அணை - முழு கொள்ளளவை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி
x
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 12 ஆண்டுகளுக்கு பிறகு, முழு கொள்ளளவான 105 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து  பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் மற்றும் வடகேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்துள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் அணையின் மேல் மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேறிவரும் ரம்மியமான காட்சியை அப்பகுதி மக்கள் ரசித்து செல்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்