டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் விரைவில் திறக்கப்படும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

திருச்சியில், மன்னர் பெரும்பிடுகு முத்தரையர், ஏ.டி பன்னீர்செல்வம், தியாகராஜ பாகவதர் உள்ளிட்டோருக்கு மணிமண்டபம் கட்டப்படவுள்ளது.
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் விரைவில் திறக்கப்படும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ
x
திருச்சியில், மன்னர் பெரும்பிடுகு முத்தரையர், ஏ.டி பன்னீர்செல்வம், தியாகராஜ பாகவதர் உள்ளிட்டோருக்கு மணிமண்டபம் கட்டப்படவுள்ளது. அந்த இடத்தை அமைச்சர்கள் கடம்பூர் ராஜு , வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, திருச்சியில் அமையவுள்ள மணிமண்டப பணிகள் விரைவில் தொடங்கும் என்றார். மேலும், திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்து உள்ளதாகவும், மணிமண்டபம் விரைவில் திறக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்