ஓமலூர் : தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த ஆண் குழந்தை பலி

ஓமலூர் அருகே தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த 2 வயது ஆண் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓமலூர் : தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த ஆண் குழந்தை பலி
x
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தோப்பூர் பகுதியை சேர்ந்தவர்  கார்த்திக். இவரது மனைவி பூங்கொடி. இவர்களுக்கு 3 குழந்தைகள். இதில் தமிழரசு என்ற குழந்தைக்கு 2 வயதாகிறது. குழந்தையின் தாத்தா பழனி, அதே பகுதியில் கயிறு திரிக்கும் ஆலை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். பழனி வேலைக்கு கிளம்பியதை பார்த்த தமிழரசு அழுதுள்ளார். இதனால் பேரனை தன்னுடன் அழைத்துச்சென்ற பழனி, வேலை பார்க்கும் இடத்தில் அமரவைத்துவிட்டு வேலை செய்துள்ளார். அப்போது நார்களை ஊறவைக்கும் தண்ணீர் தொட்டியில் சிறுவன் தவறி விழுந்துள்ளார். அங்கிருந்த இயந்திரங்களின் சத்தத்தால் சிறுவன் விழுந்தது தெரியவில்லை. வேலை முடித்துவிட்டு பேரனை தேடியபோது தான் அவன் தண்ணீர் தொட்டியில் விழுந்து பலியானது தெரியவந்தது. குழந்தையின் சடலத்தை பார்த்த உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறியழுத காட்சி பார்ப்போரை கண்கலங்க வைத்தது. 

Next Story

மேலும் செய்திகள்