"ஆரம்ப பள்ளிகள் நடுநிலை பள்ளிகளாக தரம் உயர்வு":அறிக்கை சமர்ப்பிக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு

வரும் கல்வி ஆண்டில் புதிய அரசு ஆரம்ப பள்ளிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் சுடலைக்கண்ணன் தெரிவித்துள்ளார்
ஆரம்ப பள்ளிகள் நடுநிலை பள்ளிகளாக தரம் உயர்வு:அறிக்கை சமர்ப்பிக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு
x
வரும் கல்வி ஆண்டில் புதிய அரசு ஆரம்ப பள்ளிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் சுடலைக்கண்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தகுதி வாய்ந்த ஆரம்ப பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார். புதிய அரசு ஆரம்ப பள்ளிகள் எங்கெங்கே துவக்கலாம் என்பது குறித்தும்,  தரம் உயர்த்தப்பட உள்ள ஆரம்ப பள்ளிகள் குறித்தும், வரும் 15ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் சுடலைக்கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்