சிட்பண்ட் நடத்தி ரூ.60 லட்சம் மோசடி: காவல் சார்பு ஆய்வாளர் அவரது மனைவி கைது

சென்னையில் சிட்பண்ட் நடத்தி லட்சக்கணக்கில் மோசடி செய்த காவல் சார்பு ஆய்வாளர் மற்றும் அவரது மனைவியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்
சிட்பண்ட் நடத்தி ரூ.60 லட்சம் மோசடி: காவல் சார்பு ஆய்வாளர் அவரது மனைவி கைது
x
மடிப்பாக்கத்தை சேர்ந்த பலர் தரமணி காவல் நிலையத்தில்  சார்பு ஆய்வாளராக பணியாற்றி வரும் ஜான் பீட்டர் மற்றும் அவரின் மனைவி ஜோசப்பின் ராணியும் நடத்தும் சிட்பண்ட்டில் பணம் கட்டி வந்துள்ளனர். காவல்துறையில் பணியாற்றுவதால் பணத்தை மோசடி செய்ய மாட்டார் என்ற நம்பிக்கையில் லட்சக்கணக்கில் பணம் கட்டியுள்ளனர். தவணை முடிந்து மொத்த பணத்தை திருப்பிக்கேட்டபோது  ஜான் பீட்டரும்,ஜோசிப்பின் ராணியும் இழுத்தடித்து வந்துள்ளனர். சுமார் 60 லட்ச ரூபாய் வரை, பணத்தை  தரமறுப்பதாக கூறி முதலீட்டாளர்கள் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து ஜான் பீட்டரையும் அவரது மனைவி ஜோசிப்பின் ராணியையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், புழல் சிறையில் அடைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்