நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு : மாணவரின் தந்தை ஜாமின் மனு தள்ளுபடி

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மாணவரின் தந்தை டேவிஸின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு : மாணவரின் தந்தை ஜாமின் மனு தள்ளுபடி
x
தமிழகத்தை அதிர வைத்த நீட் ஆள்மாறாட்ட புகார் வழக்கில் சென்னையை சேர்ந்த மற்றொரு மாணவரின் தந்தை டேவிஸ் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே இவரின் ஜாமின் மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, ஜாமின் வழங்கக் கோரி மீண்டும் தாக்கல் செய்த மனு நீதிபதி பார்த்திபன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி, அக்டோபர் 30ஆம் தேதி டேவிஸின் ஜாமின் மனு தள்ளுபடி செய்த நிலையில், சில தினங்களிலேயே மீண்டும் மனு தாக்கல் செய்திருப்பதாக குறிப்பிட்டார். இதற்காக 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி பார்த்திபன், டேவிஸின் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்தார். 

Next Story

மேலும் செய்திகள்