ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளோடு மாவோயிஸ்ட்கள் பயிற்சி : தமிழக- கேரள போலீசார் தீவிர விசாரணை

அதிநவீன ஏகே 47 ரக துப்பாக்கிகளோடு மாவோயிஸ்ட்கள் பயிற்சி மேற்கொண்டது குறித்து தமிழக -கேரள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளோடு மாவோயிஸ்ட்கள் பயிற்சி : தமிழக- கேரள போலீசார் தீவிர விசாரணை
x
தமிழக கேரள எல்லை பகுதியில் அட்டப்பாடி அருகே மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த மணிவாசகம், கார்த்தி, ஸ்ரீமதி, சுரேஷ் ஆகியோரை அதிரடிப்படை போலீசார் அண்மையில சுட்டு கொன்றனர். அவர்களிடமிருந்து  6 துப்பாக்கிகள் , லேப்டாப் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டது. இந்த சம்பவத்தில் மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த  தீபக், சோனா, லட்சுமி ஆகிய  3 பேர் தப்பியோடி கேரள வனப்பகுதிக்குள் தப்பி தலைமறைவாகினர். அவர்களை  கேரள மாநில தண்டர் போல்ட் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

இந்நிலையில் மாவோயிஸ்ட் தீபக் துப்பாக்கி பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ மற்றும் புகைபடங்கள் வெளியாகியுள்ளன. கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்டுகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பென் டிரைவ்களில் இந்த புகைபடம் மற்றும்  வீடியோ காட்சி இருந்ததாக கூறப்படுகிறது.  ஏ.கே.47 ரக துப்பாக்கி மாவோயிஸ்ட்களுக்கு எப்படி கிடைத்தது என்று இரு மாநில போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்