அரசு பேருந்து கண்ணாடிகளை அடித்து, உதைத்து சேதம் :2 பேரை கைது செய்த போலீசார்

திண்டுக்கல்லில் அரசு பேருந்து கண்ணாடிகளை அடித்து சேதப்படுத்திய 2 பேரை, போலீசார் கைது செய்தனர்.
அரசு பேருந்து கண்ணாடிகளை அடித்து, உதைத்து சேதம் :2 பேரை கைது செய்த போலீசார்
x
திண்டுக்கல்லில் அரசு பேருந்து கண்ணாடிகளை அடித்து  சேதப்படுத்திய 2 பேரை, போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல்லில், ஐ.என்.எல் கட்சியின் மாநில இளைஞரணி தலைவராக இருந்து வரும் அல் ஆசிக் என்பவர் மீது கொலை, வழிப்பறி, போலீஸ் அதிகாரியை தாக்கியது என 5க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் தலைமறைவாக இருந்து வந்த அவரை, போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர். இதை அறிந்த அவரது ஆதரவாளர்கள் 3 பேர், அரசு பேருந்தின்  கண்ணாடியை உடைத்து விட்டு தப்பி சென்றனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பாக முகம்மது, யாசர் அராபத் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.  

Next Story

மேலும் செய்திகள்