மகனுடன் சேர்ந்து கணவனை கொன்ற பெண் : விசாரணையில் போலீசாருக்கு அதிர்ச்சி

கரூர் மாவட்டம் பரமத்தி நொய்யல் குறுக்குச் சாலையில், தீப்பிடிந்த நிலையில் கிடந்த காருக்குள், ஆண் சடலம் ஒன்று எரிந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
x
கரூர் மாவட்டம் பரமத்தி நொய்யல் குறுக்குச் சாலையில், தீப்பிடிந்த நிலையில் கிடந்த காருக்குள், ஆண் சடலம் ஒன்று எரிந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த பரமத்தி போலீசார் நடத்திய விசாரணையில், காருக்குள் கிடந்தது, அதன் உரிமையாளர் ரங்கசாமி என உறுதி செய்த போதிலும், கொலையாளியை கண்டு பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ரங்கசாமி தொழில் அதிபர் என்பதால் தொழிற் போட்டியால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை ஆரம்பமானது. அவரது மனைவி கவிதா, மகன் அஸ்வின் குமார் ஆகியோரிடம் விசாரித்தபோது அவர்கள் அளித்த பதில்கள் போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

ரங்கசாமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும், தினமும் குடித்து விட்டு வந்து தன்னையும் மகனையும் அடித்து துன்புறுத்தியதாகவும் கவிதா கூறினார். சம்பவம் நடந்த அன்றும் அதுபோல குடித்துவிட்டு வந்த ரங்கசாமி, வழக்கம்போல, கவிதாவை அடித்தபோது, தடுக்க வந்த மகனையும் தாக்கியுள்ளார். இதையடுத்து ஆத்திரம் அடைந்த இருவரும் சேர்ந்து போதையில் இருந்த ரங்கசாமியை அடித்துக் கொன்றுள்ளனர். 
அதன்பிறகு, 'பாபநாசம்' படத்தில் போலவே ரங்கசாமி உடலை காரில் ஏற்றிச் சென்று, பெட்ரோல் ஊற்றி காருடன் எரித்துள்ளனர். இதையடுத்து, தாய், மகன் இருவரையும் கைது செய்த போலீசார் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்