பெற்றோரிடம் புகார் அளித்த வார்டன்: விடுதி வார்டனை கத்தியால் குத்தி கொன்ற மாணவன்

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே தனியார் கல்லூரி விடுதி வார்டனை மாணவர் கொலை செய்தார்
பெற்றோரிடம் புகார் அளித்த வார்டன்: விடுதி வார்டனை கத்தியால் குத்தி கொன்ற மாணவன்
x
திருச்சி மாவட்டம் துறையூர்  அருகே தனியார் கல்லூரி விடுதி வார்டனை மாணவர்  கொலை செய்தார். கண்ணனூரில் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் அப்துல் ஹக்கீம் என்று மாணவர் சரியாக படிக்காமல்  இருப்பதாக அவரது பெற்றோரிடம்  வார்டன் வெங்கட்ராமன் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவன் ஹக்கீம் வார்டன் அறைக்கு  சென்று அங்கிருந்த வெங்கட்ராமனை கழுத்திலும் இடுப்பிலும் கத்தியால்  குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் வெங்கட்ராமன் உயிரிழந்தார். இதையடுத்து மாணவன் அப்துல்ஹக்கீமை  போலீசார் கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்