ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு மீண்டும் புதிய சிக்கல்

ஊழல் வழக்கில், பெங்களுரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு, மீண்டும் புதிய சிக்கல் எழுந்துள்ளது.
ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு மீண்டும் புதிய சிக்கல்
x
ஊழல் வழக்கில், பெங்களுரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு, மீண்டும் புதிய சிக்கல் எழுந்துள்ளது. சிறையில் சசிகலாவுக்கு, சிறப்பு சலுகை வழங்குவதற்காக, 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக அப்போதைய சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா பரபரப்பு தகவலை வெளியிட்டிருந்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய வினய்குமார் கமிஷன், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் முறைகேடு நிகழ்ந்தது உண்மை என்றும், ரூபா வெளியிட்ட குற்றச்சாட்டில், ஆதாரம் உள்ளதாகவும் தெரிவித்திருந்தது. இந்த சூழலில், சிறைத்துறையின் முன்னாள் ஏடிஜிபி சத்தியநாராயணாவிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி, கர்நாடக அரசுக்கு, ஊழல் தடுப்பு அமைப்பு, மீண்டும் கடிதம் எழுதி உள்ளது. எனவே, இந்த விவகாரம், மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்