அரசு பேருந்தில் பயணிகளிடம் தகராறு - போதை ஆசாமியை நடு ரோட்டில் இறக்கிய நட‌த்துனர்

சத்தியமங்கலம் அருகே அரசு பேருந்தில் பயணிகளிடம் தகராறு செய்த போதை ஆசாமி, நடுவீதியில் இறக்கிவிடப்பட்டு அடி உதைக்கு ஆளானார்
அரசு பேருந்தில் பயணிகளிடம் தகராறு - போதை ஆசாமியை நடு ரோட்டில் இறக்கிய நட‌த்துனர்
x
கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து 50 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தமிழக அரசு பேருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த‌து. பேருந்து ஆசனூர் அருகே வனச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, மது போதையில் இருந்த ஒருவர் அருகில் இருந்த பயணிகளிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனை தட்டி கேட்ட நடத்துனரும், போதை ஆசாமியின் வசைப்பாடலுக்கு ஆளானார். ஒருகட்டத்தில் பொறுமையை இழந்த பயணிகள், போதை ஆசாமியை அடித்து உதைத்துள்ளனர். இதை கண்ட ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி போதை ஆசாமியை இறக்கி விட்டுள்ளார். கீழே இறங்கியும் போதை ஆசாமி வம்புக்கு இழுக்க, பயணிகள், மீண்டும் அடித்து உதைத்து கீழே தள்ளிவிட்டு, பேருந்தில் ஏறி சென்றனர். 

இந்த தாக்குதலில் போதை ஆசாமியின் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டது. சட்டை கிழிந்து தொங்கியது. ஆனால் எதை பற்றியும் கவலை படாத அந்த நபர், பையில் இருந்து வேறோரு சட்டையை எடுத்து  அணிந்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். 

Next Story

மேலும் செய்திகள்