கடலில் மாயமான 120 மீனவர்களை மீட்க நடவடிக்கை கோரி மனு

கடலில் மாயமான மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூத்தூர் பகுதி பங்கு தந்தைகள் கோரிக்கை மனு அளித்தனர்.
கடலில் மாயமான 120 மீனவர்களை மீட்க நடவடிக்கை கோரி மனு
x
அரபிக்கடலில் வலுப்பெற்றுள்ள கியார் புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தூத்தூர் மண்டலத்தை சேர்ந்த 120 மீனவர்கள் 11 விசைப்படகுகளில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். மீனவர்களிடம்  நவீன தகவல் தொடர்பு கருவிகள் இருந்தும் புயல் எச்சரிக்கை குறித்த விவரம் சென்றடையவில்லை என கூறப்படுகிறது. இதனால் கடலில் மாயமான அந்த மீனவர்களை  மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூத்தூர்  பகுதி பங்கு தந்தைகள் கோரிக்கை மனு அளித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்