"மருத்துவர்கள் பணிக்கு திரும்புமாறு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்"

நோயாளிகளின் நலன் கருதி போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மருத்துவர்கள் பணிக்கு திரும்புமாறு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  வேண்டுகோள்
x
நோயாளிகளின் நலன் கருதி போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயர்தகுதி அடிப்படையிலும் கடின பணிச்சூழல் உள்ள இடங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கும் சிறப்பு பணிகள் வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார். அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தேவைப்படும் இடங்களில் கூடுதல் பணியிடங்கள் உருவாக்குவது குறித்தும் அரசு பரிசீலிக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஆந்திரா, தெலங்கானா, கேரளா மற்றும் கர்நாடகாவில் மத்திய அரசுக்கு இணையாக மாநில அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்குவதில்லை என்றும் அமைச்சர் விவரித்துள்ளார். நியாயமான கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கும் என அரசு உறுதியளித்த பின்பும் மக்கள் நலம் பாதிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபடுவதை ஒருபோதும் அரசு ஏற்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்