சுவாதி கொலை வழக்கை வைத்து எடுக்கப்பட்ட படம் : படத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கு

சுவாதி கொலை வழக்கை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட நுங்கம்பாக்கம் படத்திற்கு தடை விதிக்க கோரி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுவாதி கொலை வழக்கை வைத்து எடுக்கப்பட்ட படம் : படத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கு
x
கடந்த 2016ஆம் ஆண்டு, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் ஸ்வாதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் செங்கோட்டையை சேர்ந்த பொறியியல் மாணவர் ராம்குமார் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அங்கு அவர் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டர். இந்த வழக்கை அடிப்படையாக கொண்டு நுங்கம்பாக்கம் என்ற திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தன் மகனின் மரணத்தில் உள்ள சந்தேகம் குறித்து சட்டப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த படம் விசாரணையை பாதிக்கும் என கூறி, படத்திற்கு தடை விதிக்க ராம்குமாரின் தந்தை வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜா, ராம்குமாரின் மரணம் தொடர்பாக தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான விசாரணை ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருவதால் இந்த வழக்கில், நீதிமன்றம் தலையிட முடியாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்