"அரசு அலுவலகங்களின் கழிவறைகளை பராமரிக்க வேண்டும்" - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையம் போன்று கழிவறைகளையும் பராமரிக்க வேண்டியது அரசின் கடமை என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
அரசு அலுவலகங்களின் கழிவறைகளை பராமரிக்க வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு
x
பவன்குமார் என்பவர் நெல்லை புதிய பேருந்து நிலையத்தில், ஒப்பந்தம் எடுத்து கட்டண கழிவறைகளை நடத்தி வருகிறார். புகாரின் பேரில் அங்கு திடீர் ஆய்வில் ஈடுபட்ட  அதிகாரிகள், பராமரிப்பின்றி, அதிக கட்டணம் வசூலித்ததை கண்டித்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இதை எதிர்த்து ஒப்பந்ததாரர் பவன்குமார், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எம். கோவிந்தராஜ், கழிப்பறை மற்றும் குளியல் அறைகளை சுகாதாரமாக பராமரித்தால் தான் டெங்கு, மலேரியா, காய்ச்சல்களில் இருந்து மக்களை பாதுகாக்க முடியும் என அறிவுறுத்தினார். டெல்லியில், கட்டணம் இல்லா கழிவறைகளை என்.ஜி.ஒ.க்கள் பராமரிப்பது போல், தனியார் நிறுவனங்கள் தங்கள் லாபத்தில் 25 சதவிகிதத்தை சமுதாய பங்களிப்பாக வழங்கலாம் என்ற அவர், கார்ப்பரேட் உதவியுடன் சுகாதாரமான கழிவறைகளை கட்டமின்றி நடத்துவது தொடர்பாக திட்டத்தை தயாரித்து, நெல்லை மாநகராட்சி கமிஷனர் தரப்பில் நகராட்சி நிர்வாக ஆணையருக்கு பரிந்துரைக்க உத்தரவிட்டார். இந்த பரிந்துரையை நகராட்சி நிர்வாக ஆணையர் பரிசீலித்து நவம்பர் 21ஆம் தேதிக்கு முன்னதாக அறிக்கை தாக்கல் செய்யக் கூறிய நீதிபதி, அபராதம் விதித்ததையே மனுதாரர் தரப்புக்கான நோட்டீசாக கருதி ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கவும், அதன் மீது மாநகராட்சி கமிஷனர் ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்