காலை 6 மணி முதல் 7 மணி வரை பட்டாசு வெடிக்கலாம்...

தமிழகத்தில் இந்த வருடமும் தீபாவளி நாளில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
காலை 6 மணி முதல் 7 மணி வரை பட்டாசு வெடிக்கலாம்...
x
தமிழகத்தில் இந்த வருடமும் தீபாவளி நாளில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் படி, பட்டாசு வெடிக்கும் நேரத்தையும் கட்டுப்பாடுகளையும் அந்தந்த மாநில அரசுகள் முடிவு எடுக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, இந்த ஆண்டு , வருகிற ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும் தீபாவளி நாளில்,  காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவில், 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடிக்கலாம்.  பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்றும், பட்டாசுகளின் அருகில் தீப்பற்றும் பொருட்களை வைக்கக்கூடாது -  குழந்தைகளை அருகில் செல்ல அனுமதிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றம், புனித தலங்கள் மற்றும் குடிசைப் பகுதிகளில் பட்டாசு வெடிக்க கூடாது என்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது . இதேபோல் புதுச்சேரியிலும் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 9 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்