பள்ளி மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் -நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் -நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
x
டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில்,  சுகாதாரத்துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் ஆய்வு நடத்தினர்.  அதில் தர்மபுரி, திருவள்ளூர், திருநெல்வேலி, காஞ்சிபுரம், சென்னை ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு டெங்கு அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. அதிலும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு இருப்பதும் ஆய்வில் தெரிய வந்தது.இதையடுத்து சுகாதார அதிகாரிகள் அறிக்கையின் அடிப்படையில்  பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அதில், டெங்கு காய்ச்சல் ஏற்படுவதை தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் எடுக்க வேண்டும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது



Next Story

மேலும் செய்திகள்