காவலர்களின் தியாகங்கள் என்ன...? - தெருக்கூத்து நிகழ்ச்சிகள் மூலம் விளக்கும் கலைஞர்கள்

காவலர் வீர வணக்க நாள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை மாநகர காவல்துறை சார்பில், தெருக்கூத்து நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
காவலர்களின் தியாகங்கள் என்ன...? - தெருக்கூத்து நிகழ்ச்சிகள் மூலம் விளக்கும் கலைஞர்கள்
x
காவலர் வீர வணக்க நாள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை மாநகர காவல்துறை சார்பில், தெருக்கூத்து  நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பணியின் போது இறந்த காவலர்களின் வீரத்தினை நினைவூட்டும் வகையில், அக்டோபர் 21 ஆம் தேதி வீர வணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி,  காந்திபுரம் மாநகர பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உயிர் நீத்த காவலர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. இதன் பின், காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் பேருந்து நிலையங்களில், காவலர்களின் தியாகங்களை விளக்கும் வகையில் தெருகூத்து நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Next Story

மேலும் செய்திகள்