திருச்சி நகைக்கடை கொள்ளையில் திடீர் திருப்பம் - தப்பியோடிய கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு

திருச்சி நகை கடையில் கொள்ளையடித்த ஒரு நபரை செய்த திருவாரூரில் கைது செய்த போலீசார் தப்பியோடிய மற்றொரு கொள்ளையனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
x
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா  நகைக்கடை சுவரில் துளை போட்டு உள்ளே நுழைந்த  2 கொள்ளையர் , 27 கிலோ தங்கம், ஒன்றரை கிலோ வைரம், பிளாட்டினம் நகைகள் என சுமார் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆபரணங்களை கொள்ளையடித்தனர். இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொள்ளை  குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டன. இந்த கொள்ளை சம்பவம்  குறித்து 7 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில் , திருவாரூர் மடப்புரம் பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.  அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த சீரா தோப்பு சுரேஷ் மற்றும் மடப்புரம் மணிகண்டன் ஆகியோர் போலீசாரை கண்டவுடன் அச்சமடைந்தனர். சுரேஷ் கையில் இருந்த 
பையை கீழே போட்டுவிட்டு தனியே ஓட்டம் பிடித்ததையடுத்து போலீசார் மணிகண்டனை மடக்கி பிடித்தனர்.

கைப்பற்றப்பட்ட பையை போலீசார் சோதனையிட்ட போது அதில் நான்கரை கிலோ தங்க நகைகள் இருந்தன.அவற்றில் லலிதா நகைக்கடை சீல் பதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மணிகண்டனை  காவல்நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்திய போலீசார், மேல் விசாரணைக்காக திருச்சி அழைத்து சென்றனர்.  சுரேஷூம்,  உறவினரான முருகனும் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் முக்கியமானவர்கள் என்றும் ,  கைது செய்யப்பட்ட மணிகண்டன் அவர்களது கூட்டாளி  என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தப்பியோடிய சுரேஷ் மற்றும் முருகனை தீவிரமாக தேடி வரும் போலீசார் கொள்ளையடிக்கப்பட்ட மற்ற நகைகளை கைப்பற்றும்  நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்