3 மகள்களுடன் விஷம் அருந்திய தாய் - சிகிச்சைப் பலனின்றி 2 குழந்தைகள் உயிரிழப்பு

தேனி மாவட்டம் போடி அருகே வறுமையால், விஷம் குடித்த தாயும், மகளும் உயிருக்கு போராடி வரும் நிலையில், இரண்டு சிறுமிகள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
3 மகள்களுடன் விஷம் அருந்திய தாய் - சிகிச்சைப் பலனின்றி 2 குழந்தைகள் உயிரிழப்பு
x
ஜக்கநாயக்கன்பட்டி கீரைத் தெருவை சேர்ந்த பால்பாண்டி என்பவர் இறந்த நிலையில், அவரின் மனைவி லட்சுமி, மூன்று பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்தார். ஏலக்காய் பிரித்தெடுக்கும் வேலைக்கு சென்ற வந்த லட்சுமி, 3 மகள்களையும் படிக்க வைத்தார். ஆனால், வீட்டின் வாடகை, உணவு, உடை, குழந்தைகளின் தேவை ஆகியற்றை பூர்த்தி செய்ய அவரது வருமானம் போதவில்லை. இதனால் மனமுடைந்த லட்சுமி, தமது 3 மகள்களுக்கும் விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷம் அருந்தியுள்ளார். இதில், மூத்த மகள்கள் இருவரும் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழக்க, கடைசி மகளும், தாய் லட்சுமியும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளனர். சம்பவம் அறிந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வறுமையால், ஒரு குடும்பமே விஷம் அருந்தியது, அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்