அனல்மின் நிலையத்திற்கு தண்ணீர் எடுக்க எதிர்ப்பு - மீனவர்கள் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு

உப்பூர் அனல் மின் நிலையத்திற்கு தண்ணீர் எடுப்பதற்காக கடலில் பாலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அனல்மின் நிலையத்திற்கு தண்ணீர் எடுக்க எதிர்ப்பு - மீனவர்கள் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு
x
ராமநாதபுரம் மாவட்டம்  உப்பூர் அருகே 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அனல் மின் நிலையம் அமைக்க நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அனல்மின் நிலையத்திற்கு தேவையான நீரை  எடுக்கும் வகையில்,  கடலில் சுமார் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு பாலம் அமைத்து அதில் குழாய் பொருத்தும் நடவடிக்கை நடந்து வருகிறது. இதற்கு மீனவர்கள் கமும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடலில் பாலம் அமைப்பதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும்,  படகுகளை எடுத்துச் செல்வதில் சிரமம் இருப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். கிராம சபா கூட்டத்தில்  தீர்மானத்தை பதிவு செய்ய மறுத்த அதிகாரிகளை கண்டித்து    300- க்கும் மேற்பட்ட மீனவர்கள், கிழக்கு கடற்கரை சாலை மறியலில் ஈடுபட்டனர் .

Next Story

மேலும் செய்திகள்