முதலமைச்சருடன் எஸ்.பி.வேலுமணி சந்திப்பு - விருதை காட்டி வாழ்த்து பெற்றார் அமைச்சர்

ஊரக தூய்மைக்காக தமிழகத்திற்கு கிடைத்த விருதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் காட்டி, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாழ்த்து பெற்றார்.
முதலமைச்சருடன் எஸ்.பி.வேலுமணி சந்திப்பு - விருதை காட்டி வாழ்த்து பெற்றார் அமைச்சர்
x
ஊரகத் தூய்மை கணக்கெடுப்பில், இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழகத்திற்கு விருது வழங்கப்பட்டது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி விருதை வழங்க, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதனை பெற்றுக்கொண்டார். இன்று தமிழகம் திரும்பிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். அப்போது, மத்திய அரசு வழங்கிய விருதை முதலமைச்சரிடம் அவர் காட்டினார். விருதை பார்த்து மகிழ்ந்த முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர் வேலுமணியை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்