நாங்குநேரி இடைத்தேர்தல் - இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு

நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல், நாளை வியாழக்கிழமை, மாலை 3 மணிக்கு மேல் வெளியிடப்படும்.
நாங்குநேரி இடைத்தேர்தல் - இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு
x
நாங்குநேரி இடைத்தேர்தலில், திரும்பிய திசையெங்கும், தேர்தல் சுவர் விளம்பரங்கள் காட்சி அளிக்கின்றன. வருகிற 21 ம் தேதி நடைபெறும் தேர்தலில், அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணனும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனும் போட்டியிடுகிறார்கள். இவர்களை ஆதரித்து, நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களிலும் தேர்தல் சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டு உள்ளன. வீட்டின் சுவர் மீது, கட்சி சின்னம் - வேட்பாளர் பெயர் எழுதும் பணியில், சுவர் ஓவியர்கள் சுறு சுறுப்பாக ஈடுபட்டு உள்ளனர். இதனிடையே, இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல், நாளை வியாழக்கிழமை, மாலை 3 மணிக்கு மேல் வெளியிடப்படும்.Next Story

மேலும் செய்திகள்