சந்தேகமான முறையில் ஏடிஎம்-க்குள் நின்ற இளைஞர்

சென்னை ராயப்பேட்டையில், சந்தேகத்துக்கு இடமாக நின்ற இளைஞரை, பணம் எடுக்க வந்தவர்கள் போலீஸிடம் பிடித்துக் கொடுத்தனர்.
சந்தேகமான முறையில் ஏடிஎம்-க்குள் நின்ற இளைஞர்
x
சென்னை ராயப்பேட்டையில், சந்தேகத்துக்கு இடமாக நின்ற இளைஞரை, பணம் எடுக்க வந்தவர்கள் போலீஸிடம் பிடித்துக் கொடுத்தனர். விம்.எம். தெருவில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம்.க்கு பணம் எடுப்பதற்காக, அந்தப் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் சென்றுள்ளனர். அப்போது, ஏடிஎம் உள்ளே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற இளைஞரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தாம் ஏடிஎம் வாசலில் உறங்குபவன் என்றும், நீண்ட நேரமாக ஒருவர் ஏடிஎம்க்குள் நின்றதால், தாம் உள்ளே பார்த்ததாகவும் கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். Next Story

மேலும் செய்திகள்