தமிழ் மொழி எனது அதிகாரம் என கருதுகிறேன் - கவிஞர் வைரமுத்து

இந்தியாவில் தோன்றிய முதல் நாகரீகம், சிந்து நாகரிகம் அல்ல வைகை நதிக்கரை நாகரீகம் என கவிஞர் வைரமுத்து பெருமிதமாக கூறியுள்ளார்.
தமிழ் மொழி எனது அதிகாரம் என கருதுகிறேன் - கவிஞர் வைரமுத்து
x
இந்தியாவில் தோன்றிய முதல் நாகரீகம், சிந்து நாகரிகம் அல்ல, வைகை நதிக்கரை நாகரீகம் என கவிஞர் வைரமுத்து பெருமிதமாக கூறியுள்ளார். தமது தமிழாற்றுப்படை நூலின் ஒன்பதாம் படைப்பு சென்னை திருவொற்றியூரில் நடைபெற்றது. அதில், பேசிய வைரமுத்து, தாய் மொழி என்பதால் நேசிக்க வேண்டாம், தமிழ் மொழி என்பது, அறிவு, அழகு, கவிதை, தத்துவம், நாகரீகம், பண்பாடு, வரலாறு என்றார். இந்திய நாகரிகம் சிந்து நதியில் இருந்து தொடங்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள் என்ற வைரமுத்து, அது, வைகை நதியில் இருந்து தொடங்குவதாக கூறினார். கீழடிக்கும், வைகை நதிக் கரைக்கும் 2 கிலோ மீட்டர் தூரம் தான் என்ற அவர், கீழடி நாகரிகத்தில் தோண்டப்படும் நாகரிகமே, நதிக்கரை நாகரிகம் என உறுதிபட கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்