பிரதமர் மோடி இன்று சென்னை வருகை

பிரதமர் நரேந்தர மோடி ஒருநாள் பயணமாக இன்று திங்கள்கிழமை சென்னை வருகிறார்.
பிரதமர் மோடி இன்று சென்னை வருகை
x
சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக அவர் கலந்து கொள்கிறார். பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றும் பிரதமர் மோடி, ஐ.ஐ.டி. வளாகத்தில் நடைபெறும் "ஹேக்கத்தான்" தொழில்நுட்ப  போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்குகிறார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஐ.ஐ.டி நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னை வருகிறார், மோடிசென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருவதையொட்டி சுமார் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக ஐ.ஐ.டி. வளாகம் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.  எஸ்பி ஜி பாதுகாப்பு அதிகாரிகளும் ஐஐடி வளாகத்தில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் இன்று விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.ஐ.டி வளாகத்திற்கு வருவார் என தெரிவிக்கப்பட்ட நிலையில், ஒரு வேளை சாலை வழியாக விமான நிலையத்திலிருந்து ஐ.ஐ..டி-க்கு வந்தால் பாதுகாப்பு எவ்வாறு வழங்கப்பட வேண்டும் என்கிற பாதுகாப்பு ஒத்திகையும் நடைபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்