சென்னை - ரயில்வே வாரிய முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

50 வழித்தடங்களில் தனியார் ரயில்களை இயக்க அனுமதி-ரயில்வே வாரிய முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்-தட்சிண ரயில்வே ஊழியர் சங்கம் தகவல்
சென்னை - ரயில்வே வாரிய முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
x
ரயில்வே துறையில் 50 வழித்தடங்களில் ரயில்களை இயக்க தனியாரை அனுமதிப்பது என ரயில்வே வாரியம் எடுத்துள்ள முடிவை எதிர்த்து போராட்டம் நடத்த உள்ளதாக தட்சிண ரயில்வே ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்த அச்சங்கத்தின் உதவி தலைவர் இளங்கோவன் இந்த திட்டத்தின் மூலம்  சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் முக்கிய ரயில்கள் கூட தனியார் ரயில்கள் ஆக மாறும் சூழல் உள்ளதாக  தெரிவித்தார். மேலும் திட்டத்தை எதிர்த்து போராட்டங்களை நடத்த உள்ளதாக தெரிவித்த அவர் இன்று அதற்கான முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்