ஓடும் பேருந்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு - சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இளைஞர்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே பட்டப்பகலில் ஓடும் பேருந்தில் அரிவாளால் வெட்டப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஓடும் பேருந்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு - சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இளைஞர்
x
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சதீஷ்குமார் என்ற இளைஞரை, 10 பேர் கொண்ட கும்பல் திடீரென வழிமறித்தது. அதிர்ச்சி அடைந்த அவர், வாகனத்தை கீழே போட்டுவிட்டு ஓடும் பேருந்தில் ஏறினார். விடாமல் விரட்டி சென்ற மர்ம கும்பல், பேருந்தில் ஏறி இளைஞரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. காயங்களுடன் மீட்கப்பட்ட  சதீஷ்குமார், மருத்துவமனையில் உயிரிழந்தார். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் செய்யாறில் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்