செம்மரக் கட்டைகள் கடத்த முயற்சி - தமிழக தொழிலாளி ஒருவர் கைது

திருப்பதியை அடுத்த சந்திரகிரி சேஷாசல வனப்பகுதியில், செம்மரம் கடத்த முயன்றதாக தமிழக தொழிலாளி ஒருவரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர்.
செம்மரக் கட்டைகள் கடத்த முயற்சி - தமிழக தொழிலாளி ஒருவர் கைது
x
திருப்பதியை அடுத்த சந்திரகிரி சேஷாசல வனப்பகுதியில், செம்மரம் கடத்த முயன்றதாக தமிழக தொழிலாளி ஒருவரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து 6 செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், கைதான சுப்பிரமணியம், திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. தப்பி ஓடிய நபர்களை ஆந்திர செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்