பெண்களை மிரட்டி பணிய வைத்த ஆட்டோ டிரைவர் : சமூகவலைதளத்தில் பரவும் வீடியோவால் மக்கள் அதிர்ச்சி

பல பெண்களை மிரட்டி தனது ஆசைக்கு இணங்க வைத்த ஆட்டோடிரைவர் குறித்த தகவல் வெளியாகி சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெண்களை மிரட்டி பணிய வைத்த ஆட்டோ டிரைவர் : சமூகவலைதளத்தில் பரவும் வீடியோவால் மக்கள் அதிர்ச்சி
x
சேலம், மகுடஞ்சாவடி அருகே ஓரினச் சேர்க்கைக்காக மிரட்டிய வழக்கில் கைதான ஆட்டோ டிரைவர் மோகன்ராஜ்,  தற்பொழுது பல பெண்களை கட்டாயப்படுத்தி ஆசைக்கு இணங்க வைத்த தகவல்கள் வெளியாகியுள்ளன. மகுடஞ்சாவடி ஒன்றியம், காக்காப்பாளையத்தில் இருந்து எளம்பிள்ளை பகுதிக்கு அதிகளவு பேருந்து இல்லாததால் அப்பகுதி மக்கள் 24 மணி நேரமும் ஷேர் ஆட்டோவில் சென்று வருகின்றனர். அப்படி ஷேர் ஆட்டோ ஓட்டும் மோகன்ராஜ் என்பவர், எளம்பிள்ளை பேருந்து நிலையத்தில் முருகேசன் என்பவரை ஓரினச்சேர்க்கைக்கு மிரட்டி அழைத்துள்ளார். இதையடுத்து முருகேசன் அளித்த  புகாரின் அடிப்படையில் மோகன்ராஜ் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் ஆட்டோ மோகன்ராஜ் தனியாக ஆட்டோ சவாரிக்கு வந்த பல பெண்களிடம் நைசாக பேசியும்,  மிரட்டியும் பாலியல் பலாத்காரம் செய்துள்ள தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பரவி வரும் நிலையில் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்