பேரிடர் மீட்பு குறித்த கருத்தரங்கு-வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் பேச்சு

தமிழகத்தில் பேரிடர் காலங்களில் மக்களை காப்பதற்காக 121 பேரிடர் மீட்பு நிலையங்கள் எப்போதும் தயார் நிலையில் உள்ளதாக வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
பேரிடர் மீட்பு குறித்த கருத்தரங்கு-வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் பேச்சு
x
சென்னை ஆழ்வார்பேட்டையில் பிரிட்டன் தூதரகம் மற்றும் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் தமிழக நகரங்களில் பேரிடர் பாதிப்புகளை தடுப்பது குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயகுமார், பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.  கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் அதிகளவு மக்கள் வசித்து வரும் நிலையில் சுனாமி போன்ற பேரிடர்களில் இருந்து மக்களை காப்பாற்ற 121 பேரிடர் மீட்பு நிலையங்கள் எப்போதும் தயார் நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும் வானிலை அறிக்கை என்பது யாருக்கும் சம்மந்தம் இல்லை என்று மக்கள் நினைப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் துறை செயலாளர் அதுல்ய மிஷ்ரா, வருவாய் நிர்வாக ஆணையாளர் சத்யகோபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்