"எய்ம்ஸ் அமைக்கும் பணிகளை வேகப்படுத்த வேண்டும்" - நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம்பி வலியுறுத்தல்

மாநிலங்களவை உறுதி மொழி குழுவிடம் வலியுறுத்தல்
எய்ம்ஸ் அமைக்கும் பணிகளை வேகப்படுத்த வேண்டும் - நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம்பி வலியுறுத்தல்
x
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகளை வேகப்படுத்த வேண்டுமென மாநிலங்களவை உறுதி மொழிக் குழுவிடம், எம்.பி. வெங்கடேசன் வலியுறுத்தினார். மத்திய அரசின் திட்டங்களை ஆய்வு செய்வதற்காக மாநிலங்களவையின் உறுதிமொழிக் குழு, பசுமலையில் உள்ள தனியார் விடுதியில் தமது ஆய்வுக் கூட்டத்தை தொடங்கி  உள்ளது. இந்நிலையில் அந்த குழுவிடம், மதுரை - தூத்துக்குடி தொழில் கூட வளாகத்திற்கான பணிகளை  துரிதப்படுத்த வேண்டும் என்று வெங்கடேசன் வலியுறுத்தினார். மதுரை மற்றும் தென் தமிழகப் பகுதியில் கொண்டு வரப்பட வேண்டிய இரட்டை ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவும் அவர் கேட்டுக் கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்