அண்ணாவின் 111வது பிறந்தநாளை ஒட்டி அனைத்துக்கட்சியினரும் கொண்டாட்டம்

அண்ணாவின் 111வது பிறந்தநாளை ஒட்டி தமிழகம் முழுவதும் அனைத்துக்கட்சியினரும் அவரது சிலை மற்றும் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அண்ணாவின் 111வது பிறந்தநாளை ஒட்டி அனைத்துக்கட்சியினரும் கொண்டாட்டம்
x
திருவொற்றியூர்

அண்ணா பிறந்த நாளையொட்டி, சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் திருவொற்றியூரில் திமுக அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்ற திமுகவினர்,  அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதை அடுத்து உருவபடத்திற்கு மலர் தூவி செலுத்திய திமுகவினர், மக்களுக்கு இனிப்பும், அன்னதானமும் வழங்கினர்.

திண்டுக்கல்

இதேபோல், திண்டுக்கல்லில் அண்ணாவின் சிலைக்கு அதிமுக, திமுக, மதிமுக, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

கோவை

கோவையில் அதிமுகவினர் அதிமுகவினர் ஊர்வலமாக சென்று, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
இதை அடுத்து, அதிமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரியிலும், அண்ணாவின் பிறந்த நாள் சிறப்பாக கொணாடப்பட்டது. அண்ணாவின் சிலைக்கு அதிமுக, திமுக, அமமுக என பல்வேறு கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



Next Story

மேலும் செய்திகள்