கூட்டத்துக்குள் தாறுமாறாக ஓடிய கார் : பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

மதுரையில் தாறுமாறாக ஓடிய கார் கூட்டத்திற்குள் புகுந்ததில் ஒருவர் பலியானார்.
கூட்டத்துக்குள் தாறுமாறாக ஓடிய கார் : பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்  வெளியீடு
x
மதுரையில் தாறுமாறாக ஓடிய கார் கூட்டத்திற்குள் புகுந்ததில் ஒருவர் பலியானார். கோமதிபுரம் பகுதியில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்து கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த கார் ஒன்று தாறுமாறாக ஓடி கூட்டத்திற்குள் புகுந்தது. இதில் கரும்பாலை பகுதியை சேர்ந்த தமிழரசன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 3 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காரை ஓட்டி வந்த இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பார்ப்போரை பதறவைக்கும் இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்