3 வது திருமணம் செய்ய முயன்ற கல்யாண மன்னன் - நடுரோட்டில் அடித்து உதைத்த 2 மனைவிகள்

கோவையில் 3வதாக திருமணம் செய்ய முயன்ற கணவனை 2 மனைவிகளும் அடித்து உதைத்து போலீசிடம் ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3 வது திருமணம் செய்ய முயன்ற கல்யாண மன்னன் - நடுரோட்டில் அடித்து உதைத்த 2 மனைவிகள்
x
கோவை மாவட்டம், சூலூர் நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் தினேஷ். இவருக்கு கடந்த 2016ல் பிரியதர்ஷினி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. திருமணமான 15 நாட்களில் கொடுமைப்படுத்தியதாக கூறி பிரியதர்ஷினி தன் கணவரை பிரிந்து தன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் திருமண இணையதளம் மூலம் கரூரை சேர்ந்த அனுப்ரியாவை கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்துள்ளார். ஏற்கனவே திருமணமாகி கணவரை இழந்த நிலையில் தன் 2 வயது குழந்தையுடன் இருந்த அனுப்ரியாவை திருமணம் செய்த அரவிந்த், அவரையும் குழந்தையையும் துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் அனுப்ரியாவும் கணவரை பிரிந்து வாழ்ந்தார். ஆனால் மூன்றாவதாக மணமகள் தேடி விண்ணப்பித்த அரவிந்த், தன் 2 மனைவிகளிடமும் கூறாமல் திருமணம் செய்ய முயன்றுள்ளார். இதை அறிந்து கொண்ட 2 மனைவிகளும் அரவிந்த் வேலை செய்யும் நிறுவனத்துக்கு வந்து போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது வெளியே வந்த அவரை இரு மனைவிகளும் சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் அவரை போலீசாரிடம் ஒப்படைத்ததை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்