பிரான்ஸ் ஆலைக்கு எதிராக தீப்பந்தம் ஏந்தி போராட்டம்

பிரான்ஸ் நாட்டு நிறுவனத்துக்கு ஏரிக்குள் பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் அருகே தீப்பந்தம் ஏந்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரான்ஸ் ஆலைக்கு எதிராக தீப்பந்தம் ஏந்தி போராட்டம்
x
பிரான்ஸ் நாட்டு நிறுவனத்துக்கு ஏரிக்குள் பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, திருவள்ளூர் அருகே தீப்பந்தம் ஏந்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேல்நல்லாத்தூர் கிராமத்தில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மோட்டார் வாகன உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இதற்கான போக்குவரத்தை எளிமையாக்க, அங்குள்ள பாசன ஏரிக் கரையை உடைத்துள்ளனர். இதைத் தடுத்த கிராம மக்கள், தீப்பந்தம் ஏந்தியும், செல்போன் ஒளி அடித்தும் ஊராட்சி நிர்வாகத்தையும், பன்னாட்டு நிறுவனத்தையும் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜேசிபி ஓட்டுநர் மற்றும் பன்னாட்டு நிறுவன ஊழியர் ஆகியோரை கைது செய்த போலீஸ், அவர்களை விடுவித்ததை அடுத்து மீண்டும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்