சிக்னல் கோளாறு காரணமாக ரயில் போக்குவரத்து பாதிப்பு

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த ஜாப்ரா பேட்டை பகுதியில் ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சிக்னல் கோளாறு காரணமாக ரயில் போக்குவரத்து பாதிப்பு
x
சிக்னல் கிடைக்காததால், சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் ரயில் மற்றும் அரக்கோணம் நோக்கி சென்ற மின்சார ரயில் ஆகியவை ஒன்றன் பின் ஒன்றாக நின்றன.

குடிநீர் கொண்டு செல்லும் ரயிலின் இருபுறங்களிலும் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளதால், எதிரெதிரே ரயில்கள் வருவதைபோல் இருந்ததையடுத்து பயணிகள் அச்சமடைந்தனர்.

இதனால் சென்னை மார்க்கமாக செல்லும் அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. 45 நிமிடங்களுக்கு பிறகு சிக்னல் சரிசெய்யப்பட்டதையடுத்து ரயில் போக்குவரத்து சீரடைந்தது.

Next Story

மேலும் செய்திகள்