விக்கிரவாண்டி கோவில் திருவிழாவில் இரு சமூகத்தினர் இடையே மோதல் - கல்வீச்சு - தீவைப்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே கோவில் திருவிழாவில் இரண்டு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட கல்வீச்சு மோதலால் பதற்றம் நிலவுகிறது.
விக்கிரவாண்டி கோவில் திருவிழாவில் இரு சமூகத்தினர் இடையே மோதல் - கல்வீச்சு - தீவைப்பு
x
விழுப்புரம் மாவட்டம்,  விக்கிரவாண்டி அருகே  கோவில் திருவிழாவில் இரண்டு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட கல்வீச்சு  மோதலால் பதற்றம் நிலவுகிறது. விக்கிரவாண்டி அருகே உள்ள பொம்பூர் கிராமத்தில் ஒரு சமூகத்தினரின் கோவில் திருவிழா நேற்று நடைபெற்றுள்ளது.  அப்போது சாமி வீதி ஊர்வலத்தின்போது ஊர் எல்லையில் பட்டாசு வெடித்ததாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினர் சாமி ஊர்வலத்தில் கல் எறிந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இரு தரப்பினரும் கல்வீசி தாக்கி கொண்டதுடன், சுமார் 4 ஏக்கர் கரும்பு தோட்டமும் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டோர்  காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த மோதல் சம்பவம் தொடர்பாக,  20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பதற்றத்தை தணிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 200 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்