இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ1.50 ஆயிரம் கொள்ளை : சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடும் போலீஸ்

மேலூரில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த 1 லட்சத்து 50 ஆயிரத்தை திருடி சென்ற கொள்ளையர்களை, சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் தேடி வருகின்றனர்.
இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ1.50 ஆயிரம் கொள்ளை  : சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடும் போலீஸ்
x
மேலூரில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த 1 லட்சத்து 50 ஆயிரத்தை திருடி சென்ற கொள்ளையர்களை, சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் தேடி வருகின்றனர். மேலூர் கருத்தபுளியன்பட்டியை சேர்ந்த செல்வராசு என்பவர் 1 லட்சத்து 50 ஆயிரத்தை தமது இருசக்கர வாகன பெட்டகத்தில் வைத்துள்ளார். அவர் அழகர் கோயில் சாலையில் வாகனத்தை நிறுத்திவிட்டு மருந்துகள் வாங்க சென்று விட்டு, திரும்பி வந்து பார்த்த போது பெட்டக்கத்தின் பூட்டு உடைக்கபப்ட்டு பணம் கொள்ளை அடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார், அவர் அளித்த புகாரின் அடிப்படையில் அங்குள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் மேலூர் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்