மயிலாடுதுறை : தூர்வாரப்படாத வாய்க்கால்கள்களை தூர்வார மக்கள் கோரிக்கை

மயிலாடுதுறை அருகே 30 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாத வாய்க்கால்கள்களை, உடனடியாக தூர்வார மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை : தூர்வாரப்படாத வாய்க்கால்கள்களை தூர்வார மக்கள் கோரிக்கை
x
மயிலாடுதுறை அருகே 30 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாத வாய்க்கால்கள்களை, உடனடியாக தூர்வார மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி வாய்க்கால் மற்றும் செருதியூர் வாய்கால் உள்ளது. இந்த 2 வாய்கால்களும் சுமார் 7 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இந்த வாய்கால்கள் மூலம் 9 குளங்கள் மற்றும் 500 ஏக்கர் விளை நிலங்ககள் பாசன வசதி பெறுகின்றன. ஆனால், இந்த வாய்க்கால்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாததால், பெரும்பாலான இடங்கள் ஆக்கிரமிப்பாலும், புதர்கள் மண்டியும் கிடக்கிறது. இந்நிலையில் தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் வருவதால், வாய்க்கால்களை தூர்வாரி நீர் நிரப்ப மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்