"நீட் தேர்வு மூலம் கனவை பறித்த மத்திய அரசு" - கனிமொழி பேச்சு

தாழ்த்தப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களின் மருத்துவராகும் வாய்ப்பை, நீட் தேர்வு மூலம் மத்திய அரசு பறித்து வருவதாக திமுக எம்பி தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு மூலம் கனவை பறித்த மத்திய அரசு - கனிமொழி பேச்சு
x
தாழ்த்தப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களின் மருத்துவராகும் வாய்ப்பை, நீட் தேர்வு மூலம் மத்திய அரசு பறித்து வருவதாக திமுக எம்பி தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட பின் பேசிய கனிமொழி இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து, தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களும் மருத்துவர் ஆகலாம் என்ற நிலையை உருவாக்கியது தி.மு.க. என்றும், பல்வேறு போராட்டங்களை தாண்டி பெற்ற பாரம்பரியத்தை தற்போது போராடி பாதுகாக்க கூடிய சூழல் நிலவி வருவதாகவும் அவர் பேசினார். 

Next Story

மேலும் செய்திகள்