மதுரை வாடிப்பட்டியில் தூர் வாராத கால்வாய்க்கு தூர்வாரியதாக கல்வெட்டு

மதுரை வாடிப்பட்டியில் தூர்வாராத பாசன கால்வாய்க்கு 5 லட்ச ரூபாய் செலவு செய்ததாக அதிகாரிகள் கணக்கு காட்டியுள்ள சம்பவம் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை வாடிப்பட்டியில் தூர் வாராத கால்வாய்க்கு தூர்வாரியதாக கல்வெட்டு
x
மதுரை வாடிப்பட்டியில் தூர்வாராத பாசன கால்வாய்க்கு, 5 லட்ச ரூபாய் செலவு செய்ததாக அதிகாரிகள் கணக்கு காட்டியுள்ள சம்பவம் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கால்வாயை தூர்வார கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், பொதுமக்கள் தங்கள் சொந்த செலவில் கால்வாய்களை தூர் வாரியுள்ளனர். ஆனால் பாலத்திற்கு கீழ் தூர்வாரியதாக அதிகாரிகள் கல்வெட்டு வைத்து சென்றுள்ளதை பார்த்த பொதுமக்கள் அவர்களிடம் முறையிட்டுள்ளனர். உடனடியாக அதிகாரிகள் கல்வெட்டை இடித்து சென்றுவிட்டதாக குற்றம்சாட்டும் மக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்