நாங்குநேரியில் காங். வேட்பாளருக்கு ஆதரவு தருமாறு தீர்மானம் - விளக்கம் கேட்டு நெல்லை மாவட்ட காங். நிர்வாகிக்கு நோட்டீஸ்

நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தருமாறு அங்கு நடைபெற்ற அக்கட்சி செயல்வீரர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாங்குநேரியில் காங். வேட்பாளருக்கு ஆதரவு தருமாறு தீர்மானம் - விளக்கம் கேட்டு நெல்லை மாவட்ட காங். நிர்வாகிக்கு நோட்டீஸ்
x
நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தருமாறு அங்கு நடைபெற்ற அக்கட்சி செயல்வீரர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.கே.எம். சிவக்குமாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், தீர்மானத்தை இறுதி செய்யும் முன், மாநிலத் தலைவர், செயல் தலைவர் உள்ளிட்டோருக்கு தெரியப்படுத்தாதது கட்சி விதிகளுக்கு புறம்பானது என கூறியுள்ளார். இது தொடர்பாக 7 நாட்களுக்குள், ஒழுங்கு நடவடிக்கை குழு முன்பு ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்